Pombalainga Kadhal - Unnai Ninaithu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 04, 2019   •  62 views

பாடல் பாடல்

பொம்பளைங்க
காதலத்தான் நம்பிவிடாதே
நம்பிவிடாதே நம்பியதால்
நொந்துமனம் வெம்பிவிடாதே
வெம்பிவிடாதே

அத்தான்னு
சொல்லியிருப்பா
ஆசையக்காட்டி
அண்ணான்னு சொல்லி
நடப்பா ஆளையும் மாத்தி
ஆம்பளையெல்லாம் அஹிம்சா
பாா்டி பொம்பளையெல்லாம்
தீவிரவாதி

பொம்பளைங்க
காதலத்தான் நம்பிவிடாதே
நம்பிவிடாதே நம்பியதால்
நொந்துமனம் வெம்பிவிடாதே
வெம்பிவிடாதே

பெண்ணாலே
பைத்தியமா போனவன்
உண்டு இங்கு ஆண்களாலே
பைத்தியமா ஆனவள் உண்டா
பெண்ணாலே காவிகட்டி
நடந்தவன் உண்டு இங்கு
ஆண்களாலே காவிகட்டி
நடந்தவள் உண்டா

பெண்ணுக்கு
தாஜ்மகால் கட்டி வச்சான்டா
எவளாச்சும் ஒருசெங்கல்
நட்டுவச்சாளா
நம்பிவிடாதே பொண்ண
நம்பிவிடாதே (2)

பொம்பளைங்க
காதலத்தான் நம்பிவிடாதே
நம்பிவிடாதே நம்பியதால்
நொந்துமனம் வெம்பிவிடாதே
வெம்பிவிடாதே

பெண்ணெல்லாம்
பரீட்சையிலே முதலிடம்
தாங்க நம்ம பசங்களத்தான்
எங்கே அவங்க படிக்கவிட்டாங்க

பெண்ணெல்லாம்
தங்க மெடல் ஜெயிச்சு
வந்தாங்க நம்ம பையன்
முகத்தில் தாடியத்தான்
முளைக்கவச்சாங்க

பெண்ணெல்லாம்
உலக அழகி ஆகிவந்தாங்க
ஆண்ணெல்லாம் காதலிச்சே
தலை நரைச்சாங்க

: நம்பிவிடாதே பொண்ண
நம்பிவிடாதே (2)

பொம்பளைங்க
காதலத்தான் நம்பிவிடாதே
நம்பிவிடாதே

பொம்பளைங்க
பொம்பளைங்க மோசம்
இல்லைங்க மோசம்
இல்லைங்க பொம்பளைங்க
இல்லையினா நீங்க இல்லைங்க
நானும் இல்லைங்க

உன்னை இங்கே
பெத்தவளும் பொம்பளைதானே
உன்னோட பொறந்தவளும்
பொம்பளைதானே
தப்பு செய்யாதே நீ
பொண்ண திட்டாதே (2)

0



  0