Moodi Thirantha - Thayai Katha Thanayan (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  162 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

கே.வி. மகாதேவன்

மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது

ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து
சொல் சொல் என்றது

மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

வா வா என்றது

{ அன்ன கொடி நடை
முன்னும் பின்னும் ஐயோ
ஐயோ என்றது

வண்ண கொடியிடை
கண்ணில் விழுந்து மெய்யோ
பொய்யோ என்றது } (2)

{ கன்னி பருவம்
உன்னை கண்டு காதல்
காதல் என்றது } (2)

{ காதல் என்றதும்
வேர் ஓர் இதயம் நாணம்
நாணம் என்றது } (2)

மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

வா வா என்றது

காட்டு குயிலை
கூண்டில் அடைத்து பாட்டு
பாட சொன்னது

கூட்டு குயிலை
நாட்டு குயிலாய் கூட்டி
போக வந்தது

காட்டு குயிலை
கூண்டில் அடைத்து பாட்டு
பாட சொன்னது

அது கூட்டு குயிலை
நாட்டு குயிலாய் கூட்டி
போக வந்தது

{ வேட்டை உள்ளம்
வலை விரித்து வேங்கை
வருமென நின்றது } (2)

{ வேங்கைக்காக
விரித்த வலையில் வெள்ளை
கலை மான் விழுந்தது } (2)

மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது

ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில் என்றன

ஆசை மட்டும்
வாய் திறந்து சொல்
சொல் என்றது

மூடி
திறந்த இமை இரண்டும்
பார் பார் என்றன வா
வா என்றது

0



  0