பாடல் பாடல்
தீபக், நிவாஸ்
அஜீஸ் அசோக்
தில் இருக்கு
தோளோடு அம்பிருக்கு
வில்லோடு இலக்கு என்ன
வென்று கண்டு போராடு
வெற்றியிலே துள்ளாதே
தோல்வியிலே நில்லாதே
இரண்டும் அனுபவம் தான்
எண்ணி முன்னேறு
ஒரு சோதனை
வந்தால் அதை கொண்டாடு
உன் தோள் வழியாலே அதை
துண்டாடு உன் வேர்வையை
விற்று நீ வெற்றியை வாங்கு
சிறு வேதனை தாங்கு ஒரு
சேதாரம் இல்லாமல் சிலை
வராது
ரோஜா பூவில்
முள்ளா என்று நீ உள்ளம்
சோர்ந்து யோசிக்காதே
முள்ளில் கூட ரோஜா
என்றால் உன் வாழ்க்கை
உன்னை வஞ்சிக்காதே
ஓஹோ ஓ ஓ
ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ ஓ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஒவ்வொரு நாள்
வாழ்க்கையில ஒருவனுக்கு
உதவி செய் உள்ளங்கள்
நெருங்கி வந்தால்
உலகமே உருப்படும்
குற்றம் எல்லாம்
பார்த்தாலே சுற்றம் எல்லாம்
தாங்காது மன்னிக்கும்
மனிதனுக்கு வாழ்க்கையே
வசப்படும்
நல்லது கண்டால்
நீ சீராட்டு உன் பகைவனை
கூட நீ பாராட்டு உன் வீரியம்
பார்த்து நற்காரியம் ஆற்று
உன் ஊரையே மாற்று உன்
தேசத்தை ஒரு நாளில்
தெய்வம் கொண்டாடும்
ரோஜா பூவில்
முள்ளா என்று நீ உள்ளம்
சோர்ந்து யோசிக்காதே
முள்ளில் கூட ரோஜா
என்றால் உன் வாழ்க்கை
உன்னை வஞ்சிக்காதே
தில் இருக்கு
தோளோடு அம்பிருக்கு
வில்லோடு இலக்கு என்ன
வென்று கண்டு போராடு
வெற்றியிலே துள்ளாதே
தோல்வியிலே நில்லாதே
இரண்டும் அனுபவம் தான்
எண்ணி முன்னேறு
ஒரு சோதனை
வந்தால் அதை கொண்டாடு
உன் தோள் வழியாலே அதை
துண்டாடு உன் வேர்வையை
விற்று நீ வெற்றியை வாங்கு
சிறு வேதனை தாங்கு ஒரு
சேதாரம் இல்லாமல் சிலை
வராது
ரோஜா பூவில்
முள்ளா என்று நீ உள்ளம்
சோர்ந்து யோசிக்காதே
முள்ளில் கூட ரோஜா
என்றால் உன் வாழ்க்கை
உன்னை வஞ்சிக்காதே