பாடல் பாடல்
எம்.எஸ். விஸ்வநாதன்
………………….
{ கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ } (2)
{ காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ } (2)
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
{ பச்சைக் கிளியானால்
பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல்
தேரேறி ஓடுவேன் } (2)
{ சென்ற இடம்
காணேன் சிந்தை
வாடலானேன் சேதி
சொல்லும் யாரும் தூது
சொல்லக் காணேன் } (2)
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
{ நின்ற இடம்
யாவும் நிழல் போலத்
தோணுதே
அன்று சொன்ன
வார்த்தை அலை போல
மோதுதே } (2)
{ கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர்
வாழ்வதெங்கே } (2)
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ
காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ
கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ