பாடல் பாடல்
எம்.எஸ். விஸ்வநாதன்
{ கடவுள் தந்த
இரு மலர்கள் கண்மலர்ந்த
பொன் மலர்கள் ஒன்று பாவை
கூந்தலிலே ஒன்று பாதை
ஓரத்திலே } (2)
கடவுள் தந்த
இரு மலர்கள்
{ இரு மலர்கள் } (2)
{ காற்றில்
உதிர்ந்த வண்ணமலர்
கண்ணீர் சிந்தும் சின்ன
மலர் } (2)
{ ஆற்றில் வந்து
சேர்ந்ததம்மா அலைகள்
கொண்டு போனதம்மா } (2)
பாவை கூந்தல்
சேர்ந்த மலர் பருவம்
கண்டு பூத்த மலர்
பாசம் கொண்டு
வந்ததம்மா பரிசாய்
தன்னைத் தந்ததம்மா
கடவுள் தந்த
இரு மலர்கள் கண்மலர்ந்த
பொன் மலர்கள் ஒன்று பாவை
கூந்தலிலே ஒன்று பாதை
ஓரத்திலே
கடவுள் தந்த
இரு மலர்கள்
{ அலையில்
மிதந்த மலர் கண்டு
அதன்மேல் கருணை
மனம் கொண்டு } (2)
{ தலையில்
இறைவன் சூடிக்கொண்டான்
தானே அதனை
சேர்த்துக்கொண்டான் } (2)
குழலில் சூடிய
ஒரு மலரும் கோயில்
சேர்ந்த ஒரு மலரும்
இரண்டும்
வாழ்வில் பெருமை
பெரும் இதயம் எங்கும்
அமைதி பெறும்
கடவுள் தந்த
இரு மலர்கள்