பாடல் பாடல்
{ நெஞ்சில் ஜில்
ஜில் ஜில் ஜில் காதில்
தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்
நீ கன்னத்தில் முத்தமிட்டால் } (2)
{ ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே } (2)
வாழ்வு தொடங்கும்
இடம் நீதானே
ஆஆஆஆஆஆஆஆ…..
வாழ்வு தொடங்கும்
இடம் நீதானே
வானம் முடியும்
இடம் நீதானே காற்றைப்
போல நீ வந்தாயே சுவாசமாக
நீ நின்றாயே மார்பில் ஊறும்
உயிரே
ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே
நெஞ்சில் ஜில்
ஜில் ஜில் ஜில் காதில்
தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்
நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது செல்வம் நீ
எனது வறுமை நீ இழைத்த
கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ
{ இரவல் வெளிச்சம்
நீ இரவின் கண்ணீர் நீ } (2)
{ எனது வானம்
நீ இழந்த சிறகும் நீ } (2)
நான் தூக்கி வளர்த்த
துயரம் நீ
{ ஒரு தெய்வம்
தந்த பூவே சிறு ஊடல்
என்ன தாயே } (2)