Manasae Manasae - April Maadhathil (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 23, 2019   •  2 views

பாடல் பாடல்

ஓ ஹோ ஓ
ஓ ஹோ ஓ

{ மனசே மனசே
மனசில் பாரம் நண்பர்
கூட்டம் பிரியும் நேரம் } (2)

இந்த பூமியில்
உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே ஹே
இந்த கல்லூரி சொந்தம் இது
மட்டும் தானே நட்பினை
எதிர்பார்க்குமே ஹே ஹே
யே ஹே

மனசே மனசே
மனசில் பாரம் நண்பர்
கூட்டம் பிரியும் நேரம்

மனசே மனசே
யே ஹே ஓ ஹோ ஓ ஓ

நேற்றைக்கு கண்ட
கனவுகள் இன்றைக்கு உண்ண
உணவுகள் ஒன்றாக எல்லோரும்
பரிமாறினோம்

வீட்டுக்குள் தோன்றும்
சோகமும் நட்புக்குள் மறந்து
போகிறோம் நகைச்சுவை
குறும்போடு நடமாடினோம்

நட்பு என்ற
வார்த்தைக்குள் நாமும்
வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள்
இருக்கின்றதா

பிரிவு என்ற
வார்த்தைக்குள் நாமும்
சென்று வாழத்தான்
வலிமை இருக்கின்றதா
ஹே யே யே யே யே

{ மனசே மனசே
மனசில் பாரம் நண்பர்
கூட்டம் பிரியும் நேரம் } (2)

ஆறேழு ஆண்டு
போனதும் அங்கங்கே
வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில்
நண்பன் முகம் தேடுவோம்

எங்கேயோ பார்த்த
ஞாபகம் என்றே தான்
சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம்
நாம் காணுவோம்

சின்ன சின்ன
சண்டைகள் சின்ன சின்ன
லீலைகள் இன்றுடன் எல்லாமே
முடிகின்றதே

சொல்ல வந்த
காதல்கள் சொல்லி
விட்ட காதல்கள் சுவைகளில்
சுமையானதே ஹே யே யே
யே யே

{ மனசே மனசே
மனசில் பாரம் நண்பர்
கூட்டம் பிரியும் நேரம் } (2)

இந்த பூமியில்
உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம் இது
மட்டும் தானே நட்பினை
எதிர்பார்க்குமே ஹே ஹே
யே ஹே

மனசே மனசே
மனசில் பாரம்

0



  0