Ennadi Meenakshi - Ilamai Oonjal Aadukirathu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  21 views

பாடல் பாடல்

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

வாணி ஜெயராம்

வார்த்தை
தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு
துடிக்குதடி பார்த்த
இடத்தில் எல்லாம்
உன்னைபோல் பாவை
தெரியுதடி

{ என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு } (2)
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு

{ உந்தன் உதட்டில்
நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனதில் மறைந்திருக்கும்
துளி விஷம் } (2)

நெஞ்சம்
துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன்
தோழி

என்னை மறந்து
போவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின்
பாதை மாறியது காலம்
செய்து விட்ட மாயமோ

ஒருமனம்
உருகுது ஒரு மனம்
விலகுது ஹே

என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு

{ அன்பில் விளைந்த
உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு
சிறுகதை } (2)

கண்ணன்
தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட

இந்த பிரிவை
தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற
ஊஞ்சல்போன்றதடி
நாளும் மாறுகின்ற
உன்மனம்

எனக்கு இன்று
புரிந்தது எவன் என்று
தெரிந்தது ஹேய்

{ என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு } (2)
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு

வார்த்தை
தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு
துடிக்குதடி

0



  0