Some information about the song
This song is from the film "Bheema".
The music was given by Harris Jayaraj.
The lyrics were written by Yuga Bharathi.
The song was sung by Chinmayi, Sadhana Sargham, Nikhil Mathew.
===================
பாடல் பாடல்
சின்மயி, சாதனா சர்கம்
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம்
போல் சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்
இனி இரவே
இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளறலும்
எனக்கு இசை
உன்னை காணும்
வரையில் எனது வாழ்க்கை
வெள்ளை காகிதம் கண்ணால்
நீயும் அதிலே எழுதி போனாய்
நல்ல ஓவியம் சிறு பாா்வையில்
ஒரு வார்த்தையில் தோன்றுதே
நூறு கோடி வானவில்
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்
……………………………………..
மரம் இருந்தால்
அங்கே என்னை நான்
நிழலென நிறுத்திடுவேன்
இலை விழுந்தால் ஐயோ
என்றே நான் இருதயம் துடித்திடுவேன்
இனி மேல் நமது
இதழ்கள் இணைந்து சிரிக்கும்
ஓசை கேட்குமே நெடுநாள்
நிலவும் நிலவின் களங்கம்
துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம்
போல் சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்