பாடல் பாடல்

……………………………

யாத்ரிகா நீ
போய் வா மகனே
உலகமே உந்தன்
தாய் வீடுதான்
யாத்ரிகா நீ மண்ணின்
மகனே தெரிவது உன்
தாய் நாடு தான்

எவ்விடம்
போனாலும் அவ்விடம்
நீ பார்க்கும் வானத்தின்
கூரை யாவும் ஒன்றுதானடா

மரம் செடி
கொடி இலை மலை
யாவும் உனதடா
மனிதர்கள் துணை
உண்டு உந்தன்
வாழ்க்கை முழுதும்

இனி வரும்
தினமது உந்தன்
வாழ்வின் வரமடா
புது இடம் பரிவுடன்
உன்னை தோளில் தாங்கும்

பாதை இல்லாமலே
பயணம் இல்லை உந்தன்
கால் போகும் வழியாவும்
நீ செல்லடா

பயணம் இல்லாமலே
வாழ்க்கை இல்லை இங்கு
யாத்ரீகன் நாம் தானடா

ஓஹோ ஓஹோ
ஹோ

0



  0