பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன்
{ அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே } (3)
இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் ஏன் நண்பனே
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே
பாடம் படிப்பு ஆட்டம்
பாட்டம் இதை தவிர வேறு
எதை கண்டோம்
{ புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே } (2)
பள்ளியை பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே
{ நித்தமும்
நாடகம் } (2)
நினைவெல்லாம்
காவியம்
நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்
பள்ளியை விட்டதும்
பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது
கவலையும் வந்தது
{ பாசமென்றும்
நேசமென்றும் வீடு என்றும்
மனைவி என்றும் } (2)
{ நூறு சொந்தம்
வந்த பின்பும் தேடுகின்ற
அமைதி எங்கே } (2)
அமைதி எங்கே
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே
அவனவன் நெஞ்சிலே
ஆயிரம் ஆசைகள் அழுவதும்
சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன் உள்ளவன்
போனவன் உலகிலே
பார்க்கிறோம்
{ எண்ணமே
சுமைகளாய் இதயமே
பாரமாய் } (2)
தவறுகள் செய்தவன்
எவனுமே தவிக்கிறான்
அழுகிறான்
தவறுகள் செய்தவன்
எவனுமே அழுகிறான்
எவனுமே அழுகிறான்
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே