பாடல் பாடல்
கார்த்திக்
யுவன் சங்கர் ராஜா
அன்புள்ள சந்தியா
உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்குத்
தருவாயா இல்லை காட்டில்
விடுவாயா உன் பதிலை
எதிர்ப்பார்த்து இங்கே எனது
இதயம் எங்கே எனது இதயம்
அன்புள்ள சந்தியா
உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
………………………………….
எந்த பக்கம் நீ
செல்லும் போதும் எந்தன்
காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும்
மறையாதே
தூரல் வந்தால்
கோலங்கள் அழியும்
காதல் வந்தால் கல்வெட்டும்
அழியும் என்றும் பெண்ணே
என் காதல் அழியாதே
அடி கோயில்
மூடினால் கூட கிளி
கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே
இல்லை உந்தன் காலடி எந்தன்
வாழ்வின் வேரடி
அன்புள்ள சந்தியா
உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
தாயைக் கண்டால்
தன்னாலே ஓடும் பிள்ளைப்
போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள்
அறியாதா
என்றோ யாரோ
உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே
அறிவான் அன்பே அது
நானாக கூடாதா
உன் காதல்
என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன்
கல்லை இந்த காதல் என்பதே
தொல்லை உயிரோடு எரிக்குதே
என்னை உன்னை நீங்கினால்
எங்கே போவேன் நானடி
அன்புள்ள சந்தியா
உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்குத்
தருவாயா இல்லை காட்டில்
விடுவாயா உன் பதிலை
எதிர்ப்பார்த்து