பாடல் பாடல்

ரான் எதன் யோஹன்

முடிவில்லா
முள் பாதைதான் யாரும்
சென்றாரோ வா போகும்
பாதை நீளும் நீ தேடும்
தீர்வு தூரம்

இது வரை
யார் கண்டாரோ
யாரும் வென்றாரோ
வா வெறும் நீரை தேடும்
நீர் ஆழம் தேடி போகும்
போகும்

நானா இதுவென்று
என் நிழலை கேட்கிறேன்
மாய காட்டிலே புதிய
வாசல் திறக்கிறேன்

பயணங்கள்
என்னிடம் சேர்க்கும்
பறந்து வா இதுதான்
நேரம் ஆயிரம் ஆயிரம்
தீவை தேடி ஊசலாய்
ஆடுவாய் ஓடும் காலம்
தானாய்

அவிழ்ப்பேன்
பொறு முகத்திரை
முடிப்பேன் ஒரு
திரைக்கதை அந்தம்
தேடி அந்தகாரம் விளக்க
நேரில் வா இணைய வா
இருளை சூழ்ந்த மர்மம்
தேட மயக்கங்கள் மறைய
நீயும் வா வா நீ வா

முடிவில்லா
முள் பாதைதான் யாரும்
சென்றாரோ வா போகும்
பாதை நீளும் நீ தேடும்
தீர்வு தூரம்

இது வரை
யார் கண்டாரோ
யாரும் வென்றாரோ
வா வெறும் நீரை தேடும்
நீர் ஆழம் தேடி போகும்
போகும்

நானா இதுவென்று
என் நிழலை கேட்கிறேன்
மாய காட்டிலே புதிய
வாசல் திறக்கிறேன்

பயணங்கள்
எவ்விடம் சேர்க்கும்
பறந்து வா இதுதான்
நேரம் ஆயிரம் ஆயிரம்
தீவை தேடி ஊசலாய்
ஆடுவாய் ஓடும் காலம்
தானாய்

0



  0