இழந்தது எல்லாம் திரும்பத்தா எனக் கேட்டேன்
இழந்தது எவை என இறைவன் கேட்டான் பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும் கால மாற்றத்தில் *இளமையை* இழந்தேன்
கோலம் மாறி *அழகையும்* இழந்தேன் வயதாக ஆக *உடல் நலம்* இழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்
எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்
அழகாகச் சிரித்தான் இறைவன்
கல்வி கற்றதால் *அறியாமையை* இழந்தாய்
உழைப்பின் பயனாய் *வறுமையை* இழந்தாய்
"உறவுகள் கிடைத்ததால் *தனிமையை* இழந்தாய்"
"நல்ல பண்புகளால் *எதிரிகளை* இழந்தாய்"
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
*தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்
*திகைத்தேன் *
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்
இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்
*இறைவன் மறைந்தான்..*