Yen Pirandai Magane - Bhaaga Pirivinai (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  27 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

விஸ்வநாதன் ராமமூர்த்தி

{ ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ } (3)

{ இல்லை ஒரு
பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய்
செல்வ மகனே } (2)

ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ

{ நான் பிறந்த
காரணத்தை நானே
அறியும் முன்னே
நீயும் வந்து ஏன்
பிறந்தாய் செல்வ
மகனே } (2)

ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ

கை கால்கள்
விளங்காத கணவன்
குடிசையிலும் காதல்
மனம் விளங்க வந்தாள்
அன்னையடா

காதலிலும்
பெருமை இல்லை
கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள்
உன்னையடா

ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ

மண் வளர்த்த
பொறுமையெல்லாம்
மனதில் வளர்த்தவளை
கண் மலர்ந்த பெண்
மயிலை நானடைந்தேன்

{ நீ வளர்ந்து
மரமாகி நிழல் தரும்
காலம் வரை தாய் மனதை
காத்திருப்பேன் தங்க மகனே } (2)

{ ஆராரோ
ஆரோ ஆரிராரோ } (2)

0



  0