Yaar Intha Devathai - Unnai Ninaithu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 23, 2019   •  32 views

பாடல் பாடல்

{ யாா் இந்த
தேவதை யாா் இந்த
தேவதை } (2)
ஒரு கோடி பூக்கள்
உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல
அழகான பூவொன்று
உள்ளதா

{ யாா் இந்த
தேவதை யாா் இந்த
தேவதை } (2)

………………………….

பனிகூட உன்மேல்
படும் வேளையில் குளிா்
தாங்கிடாமல் தேகம்
நடுங்குமே மலா்கூட
உன்னை தொடும் வேளையில்
பூ என்று தானே சூட நினைக்குமே

அமுதம் உண்டு
வாழ்ந்தால் ஆயுள்
முடிவதில்லை உன்
அழகை பாா்த்து வாழ்ந்தால்
அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம்
இங்கு சுகமாக தொலைந்ததே

{ யாா் இந்த
தேவதை யாா் இந்த
தேவதை } (2)

………………………….

அன்பே உன் கண்கள்
சுழல் என்கிறேன் அதனாலே
அங்கே மூழ்கி போகிறேன்
அன்பே உன் பேரை
படகென்கிறேன் அதை
சொல்லிதானே கரையை
சோ்கிறேன்

உன் கொலுசின்
ஓசை கேட்க தங்க
மணிகள் கோா்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து
போனால் கண்ணின் மணிகள்
சோ்ப்பேன் உன்னை தீவு போல
காத்து நிற்க கடலாக மாறுவேன்

{ யாா் இந்த
தேவதை யாா் இந்த
தேவதை } (2)
ஒரு கோடி பூக்கள்
உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல
அழகான பூவொன்று
உள்ளதா

{ யாா் இந்த
தேவதை யாா் இந்த
தேவதை } (2)

0



  0