Some information about the song
This song is from the film "Thalaivaa".
The music was given by G.V. Prakash Kumar.
The lyrics were written by Na. Muthu Kumar.
The song was sung by G.V. Prakash Kumar, Saindhavi.
===================
பாடல் பாடல்
யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றில்
எங்கெங்கும் வாசம் வீசுது
யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி
நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம்
அனலாலும் இந்த நெருக்கம்
தான் கொல்லுதே
எந்தன் நாளானது இன்று
வேரானது வண்ணம் நூறானது
வானிலே
யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றில்
எங்கெங்கும் வாசம் வீசுது
தீர தீர ஆசையாவும்
பேசலாம் மெல்ல தூரம் விலகி
போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
என்னை நானும்
உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம்
என்று கண்டு கொள்ளலாம்
என்னாகிறேன் என்று
ஏதாகிறேன்
எதிா் காற்றிலே
சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது
இன்று பஞ்சானது அது
பறந்தோடுது வானிலே
யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது
மண்ணில் ஓடும்
நதிகள் தோன்றும் மழையிலே
அது மழையை விட்டு ஓடி
வந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின்
மனது உலகிலே அது தோன்றும்
வரையில் புதைந்து கிடக்கும்
என்றும் மண்ணிலே
கண்ஜாடையில்
உன்னை அறிந்தேனடி
என் பாதையில்
இன்று உன் காலடி
நேற்று நான் பாா்ப்பதும்
இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம்
எதிா் பாா்ப்பதும் ஏனடி
யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றில்
எங்கெங்கும் வாசம் வீசுது
யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி
நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம்
அனலாலும் இந்த நெருக்கம்
தான் கொல்லுதே
எந்தன் நாளானது இன்று
வேரானது வண்ணம் நூறானது
வானிலே