Uyire Uyire Alaithadhenna - Uyirile Kalanthathu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  23 views

Some information about the song

  • This song is from the film "Uyirile Kalanthathu".

  • The music was given by Deva.

  • The lyrics were written by Vairamuthu.

  • The song was sung by Hariharan, Sujatha.

===================

பாடல் பாடல்

ஹரிஹரன்

தேவா
உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
உயிரே உயிரே
அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி
வந்தேன் மறைந்ததென்ன - (2)
உன் கீதம் எந்தன்
காதில் விழுமா
உன் வானம் எந்தன்
பக்கம் வருமா கங்கை
எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில்
ஓடம் செல்லுமா
உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
நீ தோன்றினாய்
அடிவானமாய் நான்
வந்ததும் தொலைவாகினாய்
கண் மூடினேன்
மெய் தீண்டினாய் கை
நீட்டினேன் கனவாகினாய்
மழை சாலையில்
குமிழாகினாய் விரல்
தீண்டினேன்
உடைந்தோடினாய்
என் தூரத்து
விண்மீனே கை ஓரத்தில்
வருவாயா என்னை ஒரு
முறை தொடுவாயா
ஒளியே யே யே யே
உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
காற்றெங்கிலும்
உன் கீர்த்தனை கண்ணீரிலே
ஆராதனை
என் தோட்டத்தில்
உன் வாசனை என் ஜீவனில்
உன் வேதனை
நான் தேடினேன்
என் கண்ணனை புயல்
சூழ்ந்ததே என் கண்களை
நான் வேறெங்கும்
மறையவில்லை என் வேர்
என்றும் அழிவதில்லை உன்
வானம் முடிவதில்லை
உறவே ஹே ஹே ஹே
உயிரே உயிரே
அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி
வந்தேன் மறைந்ததென்ன - (2)
உன் கீதம் எந்தன்
காதில் விழுமா
உன் வானம் எந்தன்
பக்கம் வருமா கங்கை
எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில்
ஓடம் செல்லுமா

0



  0