Thooliyile Aada Vantha - Chinna Thambi (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 23, 2019   •  33 views

பாடல் பாடல்

மனோ

இளையராஜா

ஓ ஹோ ….
ஓ ஹோ … ஓ ஹோ

தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே தொட்டில்
மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட

தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே

{ பாட்டெடுத்து
நான் படிச்சா காட்டருவி
கண்ணுறங்கும் பட்டமரம்
பூமலரும் பாறையிலும்
நீர்சுரக்கும் } (2)

ராகமென்ன
தாளமென்ன அறிஞ்சா
நான் படிச்சேன் ஏழு கட்ட
எட்டுக் கட்ட தெரிஞ்சா
நான் படிச்சேன் நான் படிச்ச
ஞானமெல்லாம் யார் கொடுத்தா
சாமிதான் ஏடெடுத்துப் படிச்சதில்ல
சாட்சியிந்த பூமி தான்

தொட்டில் மேலே
முத்து மாலை வண்ண
பூவா விளையாட சின்னத்
தம்பி எசபாட

{ சோறுபோடத்
தாயிருக்க பட்டினியப்
பார்த்ததில்ல தாயிருக்கும்
காரணத்தால் கோயிலுக்குப்
போனதில்ல } (2)
தாயடிச்சு வலிச்சதில்ல
இருந்தும் நான் அழுவேன்
நான் அழுதா தாங்கிடுமா
உடனே தாய் அழுவா

ஆகமொத்தம்
தாய் மனசு போல்
நடக்கும் பிள்ளை தான்
வாழுகிற வாழ்க்கையிலே
தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட

தூளியிலே
ஆடவந்த வானத்து
மின்விளக்கே ஆழியிலே
கண்டெடுத்த அற்புத
ஆணிமுத்தே தொட்டில்
மேலே முத்து மாலை
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட
வண்ண பூவா விளையாட
சின்னத் தம்பி எசபாட

0



  0