பாடல் பாடல்
விஸ்வநாதன் ராமமூர்த்தி
{ தங்கத்திலே
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு
குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ } (2)
{ சிங்கத்தின்
கால்கள் பழுது
பட்டாலும் சீற்றம்
குறைவதுண்டோ } (2)
சிந்தையும்
செயலும் ஒன்று பட்டாலே
{ மாற்றம் காண்பதுண்டோ } (2)
தங்கத்திலே
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு
குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
{ கால்கள் இல்லாமல்
வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா } (2)
இரு கைகள்
இல்லாமல் மலர்களை
அணைத்தே காதல் தர
வில்லையா காதல்
தரவில்லையா
தங்கத்திலே
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு
குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
{ காலம் பகைத்தாலும்
கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன் } (2)
உயர் மானம்
பெரிதென்று வாழும்
குல மாதர்
{ வாழ்வின் சுவை
கூறுவேன் } (2)
தங்கத்திலே
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு
குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ