Some information about the song
This song is from the film "Vaagai Sooda Vaa".
The music was given by Ghibran.
The lyrics were written by Vairamuthu.
The song was sung by Chinmayi.
===================
பாடல் பாடல்
ஜிப்ரான்
சரசர சாரக்காத்து
வீசும் போது சார பாத்து
பேசும்போது சாரப்பாம்பு
போல நெஞ்சம் சத்தம்போடுதே
சரசர சாரக்காத்து வீசும் போது
சார பாத்து பேசும்போது
சாரப்பாம்பு போல நெஞ்சம்
சத்தம்போடுதே
இத்து இத்து
இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித்தாரேன்
மூச்சு உட்பட இத்து இத்து
இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித்தாரேன்
மூச்சு உட்பட டீ போல நீ
என்னை ஏன் ஆத்துற
சரசர சாரக்காத்து
வீசும் போது சார பாத்து
பேசும்போது சாரப்பாம்பு
போல நெஞ்சம் சத்தம்போடுதே
எங்க ஊரு புடிக்குதா
எங்கத் தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல சுட்ட
ஈரல் மணக்குதா முட்டக்கோழி
புடிக்கவா மூணு படி சமைக்கவா
எலும்புகள் கடிக்கையில்
என்ன கொஞ்ச நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கத்த ரசம் வச்சு
மடக்கத்தான் பாக்குறேன் ரெட்டை
தோசை சுட்டு வச்சு காவக் காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் நிக்கிறேன்
மண்டு நீ கங்கம் ஏன் கேக்குற
சரசர சாரக்காத்து
வீசும் போது சார பாத்து
பேசும்போது சாரப்பாம்பு
போல நெஞ்சம் சத்தம்போடுதே
புல்லு கட்டு வாசமா
புத்திக்குள்ள வீசுர மாட்டு மணி
சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்டவண்டி ஓட்டுற கையளவு
மனசுல கையெழுத்து போடுற
கன்னிப்பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல
ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியில
உறங்கிப்போகும் பூனையா
வந்து வந்து பார்த்து தான்
கிறங்கி போறேன்யா மீனுக்கு
ஏங்குற கொக்கு நீ கொத்தவே
தெரியல மக்கு நீ
சரசர சாரக்காத்து
வீசும் போது சார பாத்து
பேசும்போது சாரப்பாம்பு
போல நெஞ்சம் சத்தம்போடுதே
சரசர சாரக்காத்து வீசும் போது
சார பாத்து பேசும்போது
சாரப்பாம்பு போல நெஞ்சம்
சத்தம்போடுதே
இத்து இத்து
இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித்தாரேன்
மூச்சு உட்பட இத்து இத்து
இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித்தாரேன்
மூச்சு உட்பட டீ போல நீ
என்னை ஏன் ஆத்துற
காட்டு மல்லிகை
பூத்திருக்குது காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா