Ponal Pogattum Poda - Palum Pazhamum (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  855 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

விஸ்வநாதன் ராமமூர்த்தி

………………………..

{ போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா

போனால்
போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா

போனால்
போகட்டும் போடா

………………………..

வந்தது தெரியும்
போவது எங்கே வாசல்
நமக்கே தெரியாது

வந்தவரெல்லாம்
தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே
இடமேது

வாழ்க்கை என்பது
வியாபாரம் வரும் ஜனனம்
என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும்

{ போனால்
போகட்டும் போடா } (4)

இரவல் தந்தவன்
கேட்கின்றான் அதை இல்லை
என்றால் அவன் விடுவானா

உறவைச் சொல்லி
அழுவதனாலே உயிரை
மீண்டும் தருவானா

கூக்குரலாலே
கிடைக்காது இது
கோர்ட்டுக்கு போனால்
ஜெய்க்காது அந்தக்
கோட்டையில் நுழைந்தால்
திரும்பாது

{ போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா

போனால்
போகட்டும் போடா

………………………..

எலும்புக்கும்
சதைக்கும் மருத்துவம்
கண்டேன் இதற்கொரு
மருந்தைக் கண்டேனா

இருந்தால்
அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா

நமக்கும் மேலே
ஒருவனடா அவன் நாலும்
தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும்
கலைஞனடா

{ போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா

{ போனால்
போகட்டும் போடா } (3)

………………………..

0



  0