பாடல் பாடல்
எம். பாலமுரளிகிருஷ்ணா
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை
கால் இரண்டில்
மானத்தை மூடிக்கொண்டு
கண் இரண்டில் மார்போடு
கவசம் கொண்டு தன்னை
தான் காத்து விட தவித்து
கொண்டு தன் கையால்
தன்மானம் காத்துகொண்டு
பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை
{ தன் மார்பில்
இருந்த கரம் எடுத்து
விட்டால் தலைக்கு
மேல் தன் கையை
குவித்து விட்டால் } (2)
என் கையில்
ஏதும் இல்லை என்று
சொன்னால் என் கையில்
ஏதும் இல்லை என்று
சொன்னால் காட்சி தந்து
கண்ணன் அவன் காக்க
வந்தான்
தான் என்ற
ஆத்மாவில் இன்பம்
இல்லை சரண் அடைந்த
ஜீவனுக்கு துன்பம் இல்லை
பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை