பாடல் பாடல்
தேவா
தேவா
மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம்
அதிகம் டா (2)
ரோஷம் அதிகம் டா
அத விட பாசம்
அதிகம் டா
நம்ம பழகினத
மறக்கலயே அந்த பருவம்
இப்போ கிடைக்கலையே
அந்த காட்சிகளுக்கு
நரையில்லயே இன்னும்
கண்ண விட்டுத்தான்
மறையலயே
மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்
டா
………………………
அந்த ஆத்தங்கரைய
கேட்டு பாரு மீன் புடிச்ச கத
அது சொல்லும்
அந்த பண்ண
மேட்ட கேட்டு பாரு பால்
கறந்த கத அது சொல்லும்
ஓய்
அந்த சோள காட்ட
கேட்டு பாரு கொடி புடிச்ச
கத அது சொல்லும்
அந்த டூரின் டாக்ஸிச
கேட்டு பாரு படம் பார்த்த கத
அது சொல்லும்
கர்ணம் போட்டு
கிணத்துல குதிச்ச
நினைவுகள் மலருது
மனசுக்குள் குளிருது
கம்பங்கூழு
குடிச்சிடத்தானே
உதடுகள் துடிக்குது
மீசையும் தடுக்குது
பழகினத மறக்கலயே
அந்த பருவம் இப்போ
கிடைக்கலையே அந்த
காட்சிகளுக்கு நரையில்லயே
இன்னும் கண்ண விட்டுத்தான்
மறையலயே
மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம் அதிகம்
டா டேய் டேய் டேய்
…………………………
பெத்த அப்பன
போலே அக்கறை வச்சி
செஞ்ச சேவைக்கெல்லாம்
விலையில்லயே
அந்த அன்பு
நெறைஞ்ச புள்ள பாசம்
அட உன்ன போல தான்
எனக்கில்லையே
இந்த விதி முழுக்க
தோரணம் கட்டி கண்ணு
முழிச்சதெல்லாம் எதுக்காக
நான் பெத்த
பொண்ணுதான் வாழ
வேண்டி நீ உழைச்சதெல்லாம்
எனக்காக
கர்ணன் போலே
கடமைய மதிச்சு தினம்
தினம் உழைச்சவன்
வேர்வைய வடிச்சவன்
பாட்டுக்காரன்
பாரதி சொன்ன கண்ணண
போலவே எனக்கிங்கு
பொறந்தவன்
கண்ணு ரெண்டுதான்
கலங்குதய்யா என்ன
புண்ணியம் செஞ்சேன்
உன்னை அடைய
நன்றி கடன்
தீர்க்க என்ன கொடுப்பேன்
உன் வேலைக்காரனாக
வந்து பொறப்பேன்
மீசக்கார நண்பா
உனக்கு ரோஷம்
அதிகம் டா (2) டேய்
ரோஷம் அதிகம் டா
அத விட பாசம் அதிகம்
டா
நம்ம பழகினத
மறக்கலயே அந்த பருவம்
இப்போ கிடைக்கலையே
அந்த காட்சிகளுக்கு
நரையில்லயே இன்னும்
கண்ண விட்டுத்தான்
மறையலயே
மீசக்கார நண்பா…
உனக்கு ரோஷம்
அதிகம் டா