Maanikka Theril - Thedi Vandha Mappillai (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  82 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

எம்.எஸ். விஸ்வநாதன்

……………………

{ மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது } (2)

{ ராணி உந்தன்
மேனி என்ன ராஜ வீதி
தோற்றம் தானோ } (2)

{ கேள்வி கேட்ட
மன்னன் மேனி தேவன்
கோவில் தோற்றம்
தானோ } (2)

மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

வென்பட்டு
மேனியில் கண்படும்
வேளையில் மூடுது
மேலாடை

கண் படும்
வேளையில் கை
படுமோ என்று
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ
சதிராட்டம்

இலைகளில்
ஆடும் கனியாட்டம்

கண்ணோட்டம்
பெண் : என் தோட்டம்

மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

தென்மலை
மேகங்கள் பொன்வலை
போட்டன கூந்தலில் நீராட

மின்னலில்
மேனியும் பின்னலில்
கூந்தலும் மிதப்பது
யாராட புது மழை
போலே நீரோட

அதிசய
நதியில் நானாட

நீயாட

ஆஹா தேனோட

மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

…………………..
…………………..

0



  0