Ennai Thalatta - Kadhalukku Mariyadhai (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  8 views

பாடல் பாடல்

…………………………………….

என்னை தாலாட்ட
வருவாளோ நெஞ்சில் பூ
மஞ்சம் தருவாளோ தங்க
தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே
தத்தை வருவாளா மொட்டு
இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி
கேட்கிறதே

என்னை தாலாட்ட
வருவாளோ நெஞ்சில் பூ
மஞ்சம் தருவாளோ தங்க
தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

பூ விழி பாா்வையில்
மின்னல் காட்டினாள் ஆயிரம்
ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயாில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில்
இன்று வாராத நான் தூங்க
மடி ஒன்று தாராத தாகங்கள்
தாபங்கள் தீராத தாளங்கள்
ராகங்கள் சேராத வழியோரம்
விழி வைக்கிறேன்

……………………………….

எனது இரவு அவள்
கூந்தலில் எனது பகல்கள்
அவள் பாா்வையில் காலம்
எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்

கண்ணுக்குள் இமையாக
இருக்கின்றாள் நெஞ்சுக்குள்
இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு
நான் காண வருவாளோ பாதைக்கு
நீரூற்றி போவாளோ வழியோரம்
விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட
வருவாளோ நெஞ்சில் பூ
மஞ்சம் தருவாளோ தங்க
தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே
தத்தை வருவாளா மொட்டு
இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி
கேட்கிறதே

என்னை தாலாட்ட
வருவாளோ ……. வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம்
தருவாளோ ……. தருவாளோ
தங்க தேராட்டம்
வருவாளோ ……. வருவாளோ
இல்லை ஏமாற்றம்
தருவாளோ ……. தருவாளோ

0



  0