Some information about the song
This song is from the film "Naan Kadavul".
The music was given by Ilaiyaraja.
The lyrics were written by Ilaiyaraja.
The song was sung by Madhu Balakrishnan.
===================
பாடல் பாடல்
மது பாலகிருஷ்ணன்
இளையராஜா
பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே பிச்சை
பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு
எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி
வந்தேன் ஐயனே என் ஐயனே - (2)
அம்மையும் அப்பனும்
தந்ததா இல்லை ஆதியின் வல்
வினை சூழ்ந்ததா அம்மையும்
அப்பனும் தந்ததா இல்லை
ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே பிச்சை
பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
அத்தனை செல்வமும்
உன் இடத்தில் நான் பிச்சைக்கு
செல்வது எவ்விடத்தில் அத்தனை
செல்வமும் உன் இடத்தில் நான்
பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்
இடத்தில் அதன் சூத்திரமோ அது
உன் இடத்தில்
ஒரு முறையா இரு
முறையா பல முறை பல
பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா
கணம் கணம் தினம் எனை
துடிக்க வைத்தாய்
பொருளுக்கு
அலைந்திடும் பொருளற்ற
வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள்
என்று அலைகின்ற மனம்
இன்று பிதற்றுதே அருள்
விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை
அரவணைத்து உனதருள் பெற
பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே
பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு
எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி
வந்தேன் ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே