Nilavu Oru Pennagi - Ulagam Sutrum Valiban (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  113 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

எம்.எஸ். விஸ்வநாதன்

{ நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ } (2)
நீந்துகின்ற குழலோ

{ மாதுளையின் பூ
போலே மலருகின்ற
இதழோ } (2)
மான் இனமும் மீன்
இனமும் மயங்குகின்ற
விழியோ

நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

{ புருவம் ஒரு
வில்லாக பார்வை
ஒரு கணையாக } (2)
பருவம் ஒரு தளமாக
போர் தொடுக்க பிறந்தவளோ

{ குறுநகையின்
வண்ணத்தில் குழி
விழுந்த கன்னத்தில் } (2)
தேன் சுவையை தான்
குழைத்து கொடுப்பதெல்லாம்
இவள் தானோ

நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ

பவளமென விரல்
நகமும் பசும் தளிர் போல்
வளைகரமும்

தேன் கனிகள்
இரு புறமும் தாங்கி
வரும் பூங்கொடியோ

{ ஆழ்கடலின்
சங்காக நீள்கழுத்து
அமைந்தவளோ } (2)
யாழிசையின் ஒலியாக
வாய்மொழி தான்
மலர்ந்தவளோ

நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ

செந்தழலின் ஒளி
எடுத்து சந்தனத்தின்
குளிர் கொடுத்து

பொன்பகட்டில்
வார்த்துவைத்த
பெண்ணுடலை
என்னவென்பேன்

{ மடல்வாழை
தொடை இருக்க மச்சம்
ஒன்று அதில் இருக்க } (2)
படைத்தவனின் திறமை
எல்லாம் முழுமை பெற்ற
அழகி என்பேன்

நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற
அழகோ நீரலைகள் இடம்
மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

0



  0