Nethu Poothaley - Urimaikural (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  25 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

எம்.எஸ். விஸ்வநாதன்

ஹை ஹை
ஹை ஹை

{ நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு } (2)

{ கட்டி போடாத
குமரி சிட்டு கண்கள்
பாடாதோ காதல்
மெட்டு } (2)

நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

{ கிட்ட வந்தாலே
கோபம் வரும் விட்டு
போனாலே தாபம்
வரும் } (2)

{ தத்தி தள்ளாடும்
தங்க குடம் வந்து சேராதோ
அந்தப்புறம் } (2)

உன்னை பூவா
நெனப்பேன் நெனச்சு
கையால் எடுப்பேன்
எடுத்து நெஞ்சோடணைப்பேன்
{ அணைச்சு எல்லாம்
முடிப்பேன் } (2)

நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

{ பெட்டை பின்னோடு
சேவல் வரும் சேவல்
பின்னோடு ஆவல் வரும் } (2)

{ ஆவல் வந்தாலே
காதல் வரும் காதல்
வந்தாலே ஊடல் வரும் } (2)

இந்த காதல்
கணக்கு நமக்கு கண்ணில்
இருக்கு இதுக்கு காலம்
எதுக்கு
{ நெருங்க நேரம் ஒதுக்கு } (2)

நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

{ அம்மன் தேராட்டம்
ஆடிக்கொண்டு அன்ன
கிளியாட்டம் பாடிக்கொண்டு } (2)

{ அர்த்த ஜாமத்தில்
தேடிக்கொண்டு நித்தம்
வருவாளோ அல்வா
துண்டு } (2)

இந்த மாமன்
மயக்கம் விடிஞ்சா
தீரும் வரைக்கும்

மனசு தாவி
குதிக்கும்
{ உடம்பு தீயா கொதிக்கும் } (2)

நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

கட்டி போடாத
குமரி சிட்டு கண்கள்
பாடாதோ காதல்
மெட்டு

நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

0



  0