பாடல் பாடல்
பி. உன்னிகிருஷ்ணன்
எஸ்.எ. ராஜ்குமார்
இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம்
வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை
தேடித் தேடி தேடும் மனது
தொலைகிறதே
இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை
இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை
………………………
{ கண் கொண்டு
தன் கண்ணை கண்டவர்கள்
கிடையாது என் கண்ணை
காணுகிறேன் இமை ரெண்டும்
அசையாது } (2)
குயில் இசை
கேட்டவள் இன்று குயில்
முகம் பார்க்கிறாள் உயிர்
தொட்ட பாடலின் முழு
உருவத்தை பார்க்கிறாள்
தேடும் முன்பே
வந்த பொருள் வாழ்வில்
நிலைப்பதில்லை தேடி
தேடி கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லை
இசை பாட்டும்
காற்றும் சேர்ந்த பின்பு
பிரிவதில்லை
இன்னிசை பாடகரே
இவள் விண்ணுயிர் கலந்து
விட்டால் மண்ணகம் உள்ள
வரை இவள் மனசுக்குள்
வாழ்ந்திருப்பாள்
இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை
………………………