பாடல் பாடல்

ஹரிஹரன்

தேவி ஸ்ரீ பிரசாத்

துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம்

கடவுள் தூங்கும்
நேரம் பார்த்து சாத்தான்
ஆடும் ஆட்டம்
துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
மனிதன் தூங்கும்
நேரம் பார்த்து பாசம் போடும்
வேஷம்
துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்

நீ வாய் திறந்து
கேட்டிருந்தால் உயிரை
கூட கொடுத்திருப்பேன் நீ
ஒரு பார்வை பார்த்திருந்தால்
என்னை நானே எரித்திருப்பேன்

அழித்திடவா
என்னை வளர்த்துவிட்டாய்
நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே
நகம் என்று நினைத்து நறுக்கி
விட்டாய் விரல்கள் எனக்கு
வலிக்கிறதே

துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
கடவுள் தூங்கும்
நேரம் பார்த்து சாத்தான்
ஆடும் ஆட்டம்
துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
மனிதன் தூங்கும்
நேரம் பார்த்து பாசம்
போடும் வேஷம்
துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்

துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்

தந்தை முகம்
பார்த்ததில்லை தாயுடன்
சேர்ந்து வாழ்ந்ததில்லை
அண்ணன் என நினைத்தவனே
ஆயுதமானதை அறிய வில்லை

உன் கையாக நான்
இருந்தேன் நம்பிக்கையை
உடைத்து விட்டாய் உன்
கண்ணாக நான் இருந்தேன்
கண்ணீர் துளியை பரிசளித்தாய்

தாகத்திலே மனம்
தவிக்கையிலே விஷத்தை
கொடுப்பதில் முறையும்
இல்லை ரத்தம் சொட்டும்
ரணங்கள் எல்லாம் யுத்த
களத்திற்கு புதிது இல்லை

துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம்

0



  0