பாடல் பாடல்
ஹரிஹரன்
பரத்வாஜ்
சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய் கை வீசும் ஜன்னல்
நிலா நீ வந்த வேளை வாழ்க்கை
பாதை எங்கும் வரவேற்பு மாலை
எங்கள் வீட்டு கடிகாரத்தில்
எல்லா நேரமும் இன்பம் இனி
உந்தன் பின்னால் உந்தன் அன்பால்
எங்கள் உலகம் சுற்றும்
சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய்
பெண்ணுக்கென
வாழ்க்கையிலே இலக்கணம்
உள்ளதம்மா விட்டு தரும் குணம்
இருந்தால் இலக்கியம் ஆகும்
அம்மா அனைவருக்கும் இதயத்திலே
ஆசைகள் இருக்கும் அம்மா ஆசைகள்
தான் வாழ்க்கை என்றால்
அவஸ்தைகள் பிறக்கும் அம்மா
அடி வானத்தை அளந்திட
சென்றால் அது முடிகிற காரியமா
அடி வார்த்தையை கொட்டிய பின்னால்
அதை அள்ளிட கூடிடுமா ரோஜா பூவும்
நீயும் ஒன்றே இதழ்கள் இங்கே இதயம்
எங்கே
சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய்
உன் தாயும் கேட்டாலே
விண்மீன் வேண்டும் என்று
விண்மீன்கள் நான் தருவேன்
விடியலை தருவாளா ஊஞ்சலுக்கு
கேட்டாலே வானவில் வேண்டும்
என்று வானவில்லை நான் தருவேன்
வசந்தத்தை தருவாளா
உன் ஆசைகளை ஒரு நாளும்
நான் மறுக்கவும் இல்லையடி உன்
தாயை நான் ஒரு நாளும் இங்கு
வெறுக்கவும் இல்லையடி எந்தன்
தாயே என் முகம் பாரு உந்தன்
தாய்க்கும் நல் வழி கூறு
சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய்
………………………………