Ayayayo Aananthamey - Kumki (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 23, 2019   •  7 views

பாடல் பாடல்

அய்யய்யயோ
ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமே நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஏனோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ… அய்யய்யய்யோ
அய்யய்யய்யோ…

உன்னை முதல்முறை
கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ள விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும்
எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன்

கரை சேர நீயும்
கையில் ஏந்த வா உயிா்
காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே… சுடுதே… மனதே…

அய்யய்யயோ
ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமே

கண்கள் இருப்பது
உன்னை ரசித்திட என்று
சொல்ல பிறந்தேன் கைகள்
இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்

எதற்காக கால்கள்
கேள்வி கேட்கிறேன் துணை
சோ்ந்து போக தேதி பாா்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இளம் நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா… வரவா… தரவா…..

அய்யய்யயோ
ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமே நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஏனோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ…

0



  0