பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ்
விஸ்வநாதன் ராமமூர்த்தி
{ அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே } (2)
{ என் காதுக்கு
மொழியில்லை என்
நாவுக்கு சுவையில்லை } (2)
என் நெஞ்சுக்கு நினைவில்லை
{ என் நிழலுக்கும்
உறக்கமில்லை } (2)
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
{ இந்த வீட்டுக்கு
விளக்கில்லை சொந்தக்
கூட்டுக்கு குயிலில்லை } (2)
என் அன்புக்கு மகள் இல்லை
{ ஒரு ஆறுதல்
மொழியில்லை } (2)
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
என் இதயத்தில்
பூட்டிவைத்தேன் அதில்
என்னையே காவல்
வைத்தேன் அவள்
கதவை உடைத்தாளே
{ தன் சிறகை விரித்தாளே } (2)
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
{ அவள் எனக்கா
மகளானாள் நான்
அவளுக்கு மகனானேன் } (2)
என் உரிமைத் தாயல்லவா
{ என் உயிரை எடுத்து
கொண்டால் } (2)
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே