Some information about the song

  • This song is from the film "Saattai".

  • The music was given by D. Imman.

  • The lyrics were written by Yuga Bharathi.

  • The song was sung by Santhosh Hariharan.

===================

பாடல் பாடல்

சந்தோஷ் ஹரிஹரண்

டி. இமான்
அடி ராங்கி என்
ராங்கி ராங்கி நீ போற
என் உசுர வாங்கி அடி
ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
உறங்காம கிடக்கேனே
நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள
நுழஞ்ச தவறேதும் புரியாம நீ
என்னதுக்கு நெஞ்ச வந்து
அறைஞ்ச அய்யோ பாடா
படுத்துறியே பாயா சுருட்டுறியே
என்னானதோ ஏதானதோ
ஒன்னும் புரியாமலே அல்லாடுறேன்
உன்னால நான் சொல்ல தெரியாமலே
அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன
பத்தி பேசுனா அட்ட கத்தி கூட வெட்டும்
உன்ன சொல்லி வீசுனா அழகாலே நிதம்
நீயே என்ன கட்டி வச்சு அடிக்கிறியே
என்ன ஓடா உடைக்கிறியே காடா
கொளுத்துறியே யே யே
அடி ராங்கி என்
ராங்கி ராங்கி நீ போற
என் உசுர வாங்கி
காப்பி தண்ணி போல
என்ன கண்ணு ரெண்டும்
ஆத்துதே மூடி வச்ச ஆசை
எல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே
மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி
ஆக்குற வெட்டி பய என்ன கூட
புத்தகமா மாத்துற உறி போல குறி
பாத்து என்ன சில்லு சில்லா
உடைக்கிறியே என்ன நாரா
கிழிக்கிறியே நல்லா
குழப்புறியே யே யே
அடி ராங்கி என்
ராங்கி ராங்கி நீ போற
என் உசுர வாங்கி
உறங்காம கிடக்கேனே
நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள
நுழஞ்ச தவறேதும் புரியாம நீ
என்னதுக்கு நெஞ்ச வந்து
அறைஞ்ச தானா நானானே
நானே நானே தானா நானானே
நானே நானே

0



  0