Ragasiyamanathu Kadhal - Kodambakkam (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 04, 2019   •  45 views

பாடல் பாடல்

ஹரிஷ் ராகவேந்திரா

சிற்பி

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது
காதல் (2)

முகவரி சொல்லாமல்
முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம்
அனுபவிக்கும் சுவாரசியமானது
காதல் மிக மிக சுவாரசியமானது
காதல்

சொல்லாமல் செய்யும்
காதல் கனமானது சொல்லச்
சொன்னாலும் சொல்வதுமில்லை
மனமானது சொல்லும் சொல்லை
தேடி தேடி யுகம் போனது இந்த
சோகம் தானே காதலிலே சுகமானது

வாசனை வெளிச்சத்தை
போல அது சுதந்திரமானதும்
அல்ல ஈரத்தை இருட்டினை
போல அது ஒளிந்திடும்
வெளி வரும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது
காதல்

முகவரி சொல்லாமல்
முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம்
அனுபவிக்கும் சுவாரசியமானது
காதல் மிக மிக சுவாரசியமானது
காதல்

கேட்காமல் காட்டும்
அன்பு உயர்வானது கேட்டுக்
கொடுத்தாலே காதல் அங்கு
உயிராகுது கேட்கும் கேள்விக்காக
தானே பதில் வாழுது காதல் கேட்டு
வாங்கும் பொருளும் அல்ல
இயல்பானது

நீரினை நெருப்பினைப்
போல விரல் தொடுதலில்
புரிவதும் அல்ல காதலும்
கடவுளை போல அதை உயிரினில்
உணரனும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல்
முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம்
அனுபவிக்கும் சுவாரசியமானது
காதல் மிக மிக சுவாரசியமானது
காதல்

0



  0