பாடல் பாடல்
டி.எம். சௌந்தரராஜன்
கே.வி. மகாதேவன்
{ ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா } (2)
{ உருவத்தை
பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை
காண்பவன் இறைவனடா } (2)
ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா
{ ஏறும் போது
எரிகின்றான்
இறங்கும்போது
சிரிக்கின்றான் } (2)
வாழும் நேரத்தில்
வருகின்றான் வறுமை
வந்தால் பிரிகின்றான்
ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா
{ தாயின் பெருமை
மறக்கின்றான் தன்னல
சேற்றில் விழுகின்றான் } (2)
பேய்போல்
பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை
பழிக்கின்றான்
ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா
உருவத்தை
பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை
காண்பவன் இறைவனடா
ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா