Karisal Kaattu Penne - Raja (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 23, 2019   •  973 views

பாடல் பாடல்

எஸ்.எ. ராஜ்குமார்

ஊசியிலை காட்டுகுள்ள
ஒத்தயில போற புள்ள
மாமன் நியாபகத்தில்
யாரை தேடியிங்கு
பாட்டு நீ படிச்ச

கரிசல் காட்டு
பெண்ணே என் அவனை
கண்டாயா கவிதை பேசும்
கண்ணே என் அவனை
கண்டாயா

என் இரு விழி
நடுவினில் இருப்பவன்
எவனோ அவனை
கண்டாயா

என் இருதய
நரம்பினை அறுத்தவன்
எவனோ அவனை
கண்டாயா

கொஞ்சம் கனவு
கொடுத்தவன் என் தூக்கம்
திருடி சென்றான் என்னை
தன்னில் இணைத்தவன்
இன்று ஏனோ தனியே
சென்றான்

உன் இரு விழி
நடுவினில் இருப்பவன்
எவனோ அவனை
கண்டாயா

உன் இருதய
நரம்பினை அறுத்தவன்
எவனோ அவனை
கண்டாயா

கரிசல் காட்டு
பெண்ணே என் அவனை
கண்டாயா கவிதை பேசும்
கண்ணே என் அவனை
கண்டாயா

…………………………

ஓ ஓ ஒரு முறை
பார்த்தால் உயிர் வரை
வேர்த்தேன் அசைவத்தில்
ஆசை அதிகம் என்னை
தின்றானே

ஓ ஓ அவன் மட்டும்
இங்கே ஒரு நொடி வந்தால்
அரை டஜன் பிள்ளை பெற்று
கையில் தருவேனே

அவன் மல்லிகை
உதடுகள் பிடிக்கும் அவன்
மார்பின் முடிகள் பிடிக்கும்
ஐயோ சந்தன நிறமோ
பிடிக்கும் கொஞ்சம்
சாய்கின்ற நடையும்
பிடிக்கும்

என் அவனுக்கு
மட்டும் யானை பலத்தில்
ஏழு மடங்காச்சே அவன்
ஒரு விரல் தீண்டி நொறுங்கிடவே
நான் உயிரை வளர்த்தேனே

கரிசல் காட்டு
பெண்ணே என் அவனை
கண்டாயா கவிதை பேசும்
கண்ணே என் அவனை
கண்டாயா

தாமரை
பெண்ணே தாமரை
பெண்ணே

ஓஓ
ஹோ ஓஓஹோ ஓஓ

தாமரை
பெண்ணே தாமரை
பெண்ணே

ஓஓ
ஹோ ஓஓஹோ ஓஓ

தாமரை
பெண்ணே தாமரை
பெண்ணே காதலன்
வருவான் காத்திரு

உன் கைவளை
ஒளி அவன் காதினில் கேட்கும்
வைகறை பெண்ணே காத்திரு

ஓ ஓ…வருஷங்கள்
எல்லாம் நிமிஷங்கள் ஆக
அவன் வருவான் என்று
காத்திருந்தேன்

ஓ ஓ அவன் குரல்
கேட்கும் திசைகளில்
எல்லாம் புது புது கோலம்
போட்டு வைத்தேன்

என் தாவணி
வயதுகள் போச்சே ஒரு
ஆயிரம் வளர்பிறை ஆச்சே
அந்த ராட்சசன் ஏன் வர
வில்லை இன்னும் பூகுடை
சாய்ந்திட இல்லை

என் இருபது போகும்
எழுவதும் ஆகும் அவனை
விடமாட்டேன்

என் மடியினில்
ஒரு நாள் தலை வைத்து
தூங்கும் அழகை நான்
பார்ப்பேன்

கரிசல் காட்டு
பெண்ணே என் அவனை
கண்டாயா கவிதை பேசும்
கண்ணே என் அவனை
கண்டாயா

உன் இரு விழி
நடுவினில் இருப்பவன்
எவனோ அவனை
கண்டாயா

உன் இருதய
நரம்பினை அறுத்தவன்
எவனோ அவனை
கண்டாயா

கொஞ்சம் கனவு
கொடுத்தவன் என் தூக்கம்
திருடி சென்றான் என்னை
தன்னில் இணைத்தவன்
இன்று ஏனோ தனியே
சென்றான்

உன் இரு விழி
நடுவினில் இருப்பவன்
எவனோ அவனை
கண்டாயா

உன் இருதய
நரம்பினை அறுத்தவன்
எவனோ அவனை
கண்டாயா

ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஹாஹா ஹா
ஹா ஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஹாஹா ஹா
ஹா ஹா

0



  0