Idhazhil Kathai - Unnal Mudiyum Thambi (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  0 views

பாடல் பாடல்

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இளையராஜா

இதழில் கதை எழுதும்
நேரமிது இதழில் கதை எழுதும்
நேரமிது இன்பங்கள் அழைக்குது
ஆஆஆஆ….

மனதில் சுகம்
மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
ஆஆஆஆ….. மனதில்
சுகம் மலரும் மாலையிது

இளமை அழகை
அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி
அணைப்பதற்கே இரு கரம்
துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும்
பிறக்குது

இதழில் கதை
எழுதும் நேரமிது

காதல் கிளிகள்
ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என்
நெஞ்சில் உதிக்கும்

நானும் நீயும்
சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என்
நெஞ்சம் இனிக்கும்

இனிய பருவமுள்ள
இளங்குயிலே இனிய பருவமுள்ள
இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட
இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து
இடையினில் தடுக்குது

ஏங்கித் தவிக்கையில்
நாணங்கள் எதற்கடி ஏக்கம்
தனிந்திட ஒரு முறை தழுவடி

காலம் வரும் வரை
பொறுத்திருந்தால் கன்னி
இவள் மலர்க்கரம் தழுவிடுமே

காலம் என்றைக்கு
கனிந்திடுமோ காளை மனம்
அதுவரை பொறுத்திடுமோ

மாலை மலா்
மாலை இடும் வேளை
தனில் தேகம் இது
விருந்துகள் படைத்திடும்

இதழில் கதை எழுதும்
நேரமிது இதழில் கதை எழுதும்
நேரமிது இன்பங்கள் அழைக்குது
ஆஆஆஆ….

மனதில் சுகம்
மலரும் மாலையிது

தோகை போலே
மின்னும் பூவை உந்தன்
கூந்தல் கார்மேகம் என்றே
நான் சொல்வேன் கண்ணே

பாவை எந்தன்
கூந்தல் வாசம் யாவும்
அந்த மேகம் தனில் ஏது
நீ சொல்வாய் கண்ணா

அழகைச் சுமந்து
வரும் அழகரசி அழகைச்
சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில்
வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது
தேயுது மறையுது நங்கை
முகமென யாரதைச் சொன்னது

மங்கை உன் பதில்
மனதினைக் கவருது
மாரன் கணை வந்து
மார்பினில் பாயுது

காமன் கனைகளைத்
தடுத்திடவே காதல் மயில்
துணை என வருகிறது

மையல் தந்திடும்
வார்த்தைகளே மோகம்
எனும் நெருப்பினைப்
பொழிகிறது

மோகம் நெருப்பாக
அதை தீர்க்குமொரு ஜீவ நதி
அருகினில் இருக்குது

மனதில் சுகம்
மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
ஆஆஆஆ…

இதழில் கதை
எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
ஆஆஆ…. இதழில் கதை
எழுதும் நேரமிது

0



  0